×

சைப்ரஸ் நாட்டில் புதிய அதிபர் தேர்வு

நிக்கோசியா: சைப்ரஸ் நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் 51.9 சதவீத வாக்குகளுடன் நிகோஸ் கிறிஸ்டோடவுலைட்ஸ் வெற்றி பெற்று உள்ளார். சைப்ரஸ் நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில், 4.05 லட்சத்திற்கும் கூடுதலான வாக்காளர்கள் ஓட்டு போட்டனர். 72.4 சதவீதம் வாக்கு பதிவானது. இந்த தேர்தலில், 49 வயதுடைய முன்னாள் வெளியுறவு அமைச்சர் நிகோஸ் கிறிஸ்டோடவுலைட்ஸ் 51.9 சதவீத வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட 66 வயது கொண்ட ஆண்டிரியாஸ் மேவ்ராய்யன்னிசுக்கு 48.1 சதவீத வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து நிகோஸ் புதிய அதிபராக தேர்வு பெற்றார்.

Tags : Cyprus , Cyprus elects new president
× RELATED ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்