×

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

சென்னை: ‘ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும்’ என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலை கல்யாணபுரம் பகுதியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், ரூ.46 கோடி மதிப்பீட்டில் 288 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய குடியிருப்பு கட்டுமான பணியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, 2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட பணியை குறித்த நேரத்தில் முடிக்காததால், ஒப்பந்ததாரரிடம் ஏன் காலதாமதம் என கேட்டு, சரியான நேரத்தில் முடிக்காததால் ஒப்பந்ததாரரை கருப்பு புள்ளி பட்டியலில் வைத்து விடுவேன் என எச்சரித்தார்.

பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் பேசியதாவது: கல்யாணபுரம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், ரூ.46 கோடி செலவில் 2019ம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. கொரோனா போன்ற காரணங்களாலும், ஒப்பந்ததாரரின் கவனகுறைவு, சுனக்கம் காரணமாக பணிகள் சரியான நேரத்தில் முடிக்க முடியாமல் போனது. தற்போது மின்சாரம், சென்னை மாநகராட்சி, குடிநீர் கழிவுநீர் அகற்று வாரியம் என அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து பணியை வேகப்படுத்தி உள்ளோம்.

இதனால், ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்து பணிகள் முழுமையாக முடிக்கப்படும். 2 மாதத்தில் இந்த பகுதியில் குடியிருந்தவர்கள் மீண்டும் மறு குடியமர்த்தப்படுவர். மேலும், கட்டுமான பணிகளில் எந்தவிதமான சமரசமும் நாங்கள் வைத்து கொள்வதில்லை. தரத்திற்கு சந்தேகம் இல்லை. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் வாக்கு கேட்டு சென்ற பொழுது எந்த இடத்திலும் திமுக அரசின் மீது பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கவில்லை. இந்த, இடைத் தேர்தலில் திமுக தோழமை கட்சிகள் வெற்றி பெறும். அனைவரும் சமம் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : DMK ,Erode East ,Minister ,PK Shekharbabu , DMK alliance will win in Erode East by-election: Minister PK Shekharbabu interview
× RELATED திமுக-காங். கூட்டணியில் எந்த மாற்றமும்...