×

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் உயிருடன் இல்லை: இலங்கை ராணுவம் விளக்கம்..!

கொழும்பு: தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் உயிருடன் இல்லை என இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டில் விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இறுதி கட்ட போர் நடந்தது. அப்போது, விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் குடும்பத்துடன் கொல்லப்பட்டார். போர் முனையில் யாரென்றே தெரியாமல் அவர்கள் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் கூறியிருந்தது. இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், உயிருடன் நலமாக இருப்பதாக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், தஞ்சாவூரில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அதன்போது, பிரபாகரன், அவருடைய மனைவி, மகள் ஆகியோர் நலமுடன் இருப்பதாகவும் அவர்கள் உரிய நேரத்தில் வெளிப்படுவார்கள் எனவும் பழ. நெடுமாறன் தெரிவித்திருக்கிறார். ஆனால் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக வெளியான செய்திக்கு இலங்கை ராணுவம் மறுத்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய இலங்கை ராணுவ செய்தித்தொடர்பாளர் ரவி ஹெராத்; 2009ல் நடந்த இறுதிப்போரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார். அவர் உயிருடன் இருக்கிறார் என்ற தகவல்களில் உண்மையில்லை. அவரது மரபணு ஆதாரங்களும் எம்வசம் உள்ளது இவ்வாறு கூறினார்.


Tags : Prabhakaran ,Sri Lankan Military , LTTE leader V. Prabhakaran is not alive: Sri Lanka Army explanation..!
× RELATED கப்பலில் கடத்தப்பட்ட ரூ.1 லட்சம் கோடி...