×

ஆளுநர் மாளிகை முதல் வாசல் அருகே உள்ள பள்ளிவாசலில் தொடர்ந்து தொழுகை நடத்த அனுமதி: ஜவாஹிருல்லா எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னையில் ஆளுநர் மாளிகையின் முதல் வாசல் அருகே பல ஆண்டுகளாக ஒரு பள்ளிவாசல் இயங்கி வந்தது.தொழுகைக்கு வருபவர்கள் தங்களைப் பற்றிய விவரங்கள் மற்றும் வாகன விவரங்களை நுழைவாயிலில் காவல் அதிகாரிகளிடம் பதிவு செய்து விட்டே தொழுது வந்தனர். கொரோனாவில் பூட்டப்பட்ட அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பிவிட்ட பிறகும் ஆளுநர் மாளிகை வளாகப் பள்ளிவாசல் மட்டும் தொடர்ந்து பூட்டப்பட்டு தொழுகைக்கு அனுமதியும் மறுக்கப்பட்டு வருகிறது. இது மிகவும் வேதனைக்கும் கண்டனத்திற்கும் உரியது. இதில் உள்நோக்கம் உள்ளதோ என்ற ஐயமும் ஏற்படுகிறது. இதுகுறித்து ஆளுநர் உரிய கவனமெடுத்து, பள்ளிவாசலில் தொடர்ந்து தொழுகை நடைபெற ஆவன செய்ய வேண்டுகிறோம்.


Tags : Governor's ,House ,Jawahirullah ,MLA , Permit to continue prayers at mosque near first gate of Governor's House: Jawahirullah MLA insists
× RELATED விஜய்யிடம் தேர்தல் ஒப்பந்தம் போட துடிக்கும் பாஜ: செல்வப்பெருந்தகை தகவல்