×

கால்நடை பராமரிப்பு துறை வாகனங்கள் 16ம்தேதி ஏலம்: காஞ்சிபுரம் கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் கால்நடை பராமரிப்பு துறை  உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள வாகனங்கள்  வரும் 16ம்தேதி காலை 11 மணிக்கு காஞ்சிபுரம் கால்நடை பராமரிப்பு துறை கால்நடை பெரு மருத்துவமனை வளாகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது. ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் முன்பிணைத்தொகை ரூ.2000 ரொக்கமாகவோ அல்லது வரைவோலையாகவோ செலுத்த வேண்டும்.

11 மணிக்கு  பின் வருபவர்கள் ஏலம் கேட்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.  அரசு நிர்ணயித்த தொகைக்கு குறைவாக ஏலம் கோரப்படின் ஏலம் ரத்து செய்யப்பட்டு மறு ஏலம் வேறு தேதிகளில் நடத்தப்படும். ஏலம் எடுத்தவர்  உடனே பணத்தை செலுத்தி பொருளை எடுத்து செல்ல வேண்டும்.  ஏலம் எடுத்தவர் தொகை செலுத்தாத பட்சத்தில் முன்பிணைத்தொகை மீள வழங்கப்படமாட்டாது.

ஏலம் எடுத்தவர் நீங்கலாக மற்றவர்களின்  முன்பிணைத்தொகை மீள வழங்கப்படும். ஏலத்தினை ரத்து செய்வதற்கோ, நிறுத்தி வைப்பதற்கோ அலுவலர்களுக்கு முழு அதிகாரம் உண்டு. ஏலம் எடுப்பவர் ஏலத்தொகையுடன்  ஜிஎஸ்டி 18 சதவீதம் சேர்த்து செலுத்தி வாகனத்தினை எடுத்து செல்ல வேண்டும். ஏலம் விடப்பட உள்ள வாகனங்களை அலுவலக வேலை நாட்களில் காலை 11  மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிடலாம்.

Tags : Animal Husbandry Department Vehicles ,Kanchipuram , Animal Husbandry Department Vehicles 16th Auction: Kanchipuram Collector Info
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...