×

உக்ரைன் - ரஷ்யா போர்; புடினை மோடியால் சமாதானப்படுத்த முடியும்: அமெரிக்க அதிகாரி பேட்டி

வாஷிங்டன்: இந்திய பிரதமர் மோடியால், ரஷ்ய அதிபர் புடினை சமாதானப்படுத்த முடியும் என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறினார். உக்ரைன் - ரஷ்யப் போர் குறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், ‘ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். அதற்காக இந்திய பிரதமர் மோடி எடுக்கும் எந்தவொரு முயற்சியையும் அமெரிக்கா வரவேற்கும். போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபர் புடினுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது என்று நினைக்கிறேன்;

பிரதமர் மோடியால், புடினை சமாதானப்படுத்த முடியும். கடந்த காலங்களில் மோடியும், புடினும் சந்தித்த போது, ‘தற்போது போருக்கான காலம் அல்ல’ என்று புடினிடம் மோடி கூறினார். மோடியின் இந்த கருத்தை அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் வரவேற்றுள்ளன. ரஷ்யா-உக்ரைன் போருக்கு புடின் தான் காரணம். உக்ரைன் மக்கள் படும் இன்னல்களுக்கு புடின் மட்டுமே காரணம். அவர் நினைத்தால் போரை முடிவுக்கு கொண்டு வரமுடியும். இரு நாடுகளுக்கும் இடையிலான பகைமை முடிவுக்கு வர வேண்டும். இருதரப்பும் பேச்சுவார்த்தைகளை தொடங்க வேண்டும். அதற்கான முயற்சிகளை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எடுத்து வருகிறார்’ என்று கூறினார்.

Tags : Ukraine ,Russia ,Modi ,Putin , Ukraine-Russia War; Modi Can Convince Putin: US Official Interview
× RELATED உக்ரைன் போருக்கு மத்தியில் அணு ஆயுத போர் பயிற்சி: ரஷ்யா பகிரங்க அறிவிப்பு