×

எகிறி அடிக்கும் தங்கம் விலை... ஒரே நாளில் ரூ.160 உயர்ந்து சவரன் ரூ.42,720க்கு விற்பனை : கவலையில் நகை பிரியர்கள்!!


சென்னை: தங்கம் விலை கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து வந்தது. தொடர்ந்து கடந்த 2ம் தேதி தங்கம் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டது. அன்றைய தினம் மட்டும் சவரன் ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,040க்கும் விற்கப்பட்டது. இந்த வரலாற்று விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.3ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ஒரு சவரன் ரூ.43,320க்கு விற்கப்பட்டது. 8ம் தேதி சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,064க்கும் விற்கப்பட்டது.

இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் சவரன் ரூ.43 ஆயிரத்தை தாண்டியது.நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து ஒரு கிராம் ரூ.5,375க்கும், சவரனுக்கு ரூ.64 குறைந்து ஒரு சவரன் ரூ.43,000க்கும் விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.42,560க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5340க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,720க்கும் விற்கப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ. 72.70க்கும் ஒரு கிலோ ரூ. 72,700க்கு விற்கப்படுகிறது.



Tags : Ekri ,SHAVAN , Gold, Sawaran, Sale
× RELATED பள்ளிகொண்டா அருகே பாலீஷ் போடுவதாக...