×

ஜல்லிக்கட்டு வீரர் கொலை

குஜிலியம்பாறை: திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே மணவாளநாயக்கனூர் எனும் இடத்தில் தனியாருக்கு சொந்தமான செயல்படாத கல் குவாரி உள்ளது. இங்கு தேங்கி கிடக்கும் தண்ணீரில் நேற்று முன்தினம் மாலை வாலிபர் பிணம் மிதப்பதாக குஜிலியம்பாறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் பார்த்தபோது, கயிற்றை கொண்டு கை, கால்கள் கட்டப்பட்டும், உடலில் கல்லை கட்டிய நிலையில் வாலிபர் பிணம் கிடந்தது தெரியவந்தது.
இதனால் வாலிபரை ெகாலை செய்து குவாரியில் வீசி சென்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கொலையான வாலிபர் திருச்சி மாவட்டம், வையம்பட்டி கருங்குளத்தை சேர்ந்த மணி (23) என்பதும், ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர் என்பதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்த போலீசார் கொலையாளி யார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Jallikattu , Jallikattu player killed
× RELATED கொன்னையம்பட்டியில் ஜல்லிக்கட்டு; 800...