×

இந்தோனேசியாவை அதிர வைத்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1-ஆக பதிவானது: கடலோர மிதக்கும் உணவகம் மூழ்கியதில் 4 பேர் உயிரிழப்பு

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கத்தால் மிதக்கும் கடல் உணவகம் ஒன்று மூழ்கியதில் 4 பேர் உயிரிழந்தனர். இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள பப்புவா மாகாணத்தில் கடலோர நகரமான ஜெயபூராவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.1-ஆக பதிவான இந்த  நிலநடுக்கம் தென்மேற்கே கடலுக்கு அடியில் 22 கிலோ மீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு ஏற்பட்டது. இதன் காரணமாக கடற்கரையை ஒட்டிய வீடுகள் மற்றும் கட்டடங்கள் அதிர்ந்தன. மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி திறந்த வெளிகளில் தஞ்சமடைந்தனர்.

நிலநடுக்கத்தின் தாக்கத்தால் கடற்கரையில் நிறுத்தப்பட்டு இருந்த மிதக்கும் உணவகம் ஒன்று சேதமடைந்து கடலில் மூழ்கியது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். கடல் மீது தத்தளித்து கொண்டு இருந்த 10-க்கும் மேற்பட்டவர்களை உள்ளூர் மீனவர்கள் காப்பாற்றி கரை சேர்த்தனர். கடற்கரையோரம் இருந்த பழமையான சில வீடுகளும் இடிந்து விழுந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் இந்தோனேசியா பேரிடர் மேலாண்மை படையினர் ஈடுபட்டுள்ளன.  



Tags : Indonesia , Indonesia, earthquake, restaurant, drowning, loss of life
× RELATED இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்