×

காதலர் தினத்தில் பசுவை அணைப்போம்: இந்திய விலங்குகள் நல வாரியம் அழைப்பு

புதுடெல்லி: காதலர் தினத்தை ‘‘பசு அணைப்பு தினமாக” கொண்டாட வேண்டும் என்று இந்திய விலங்குகள் நல வாரியம் தெரிவித்து உள்ளது.
உலகம் முழுவதும் பிப்.14ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது.

இதுபற்றி இந்திய விலங்குகள் நல வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 அன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் தாய் பசுவின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு,   பசு அரவணைப்பு தினமாக அனைத்து பசுப் பிரியர்களும் கொண்டாடலாம். பசுக்களை கட்டிப்பிடித்தால் உணர்ச்சி பந்தம் பெருகும். தனிநபர் மகிழ்ச்சியும், குடும்ப மகிழ்ச்சியும் அதிகரிக்கும். எனவே மேற்கத்திய கலாச்சாரத்தை ஒழித்து நமது பாரம்பரியத்தை காப்போம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Valentine ,Day ,Indian Animal Welfare Board , Valentine's Day, Let's Kill the Cow, Indian Animals Welfare Board,
× RELATED மதுரை ஒத்தக்கடையில் வணிகர்கள்,...