ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றார்

டெல்லி : சென்னை விமானநிலையத்தில் இருந்து இன்று காலை 7.15 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது மனைவியுடன் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக புதுடெல்லிக்கு 2 நாள் பயணமாக புறப்பட்டு சென்றார். அவர்களுடன் பாதுகாப்பு அதிகாரிகளும் சென்றனர். பின்னர், அவர் புதுடெல்லியில் இருந்து நாளை இரவு 10.40 மணியளவில் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக சென்னை திரும்புகிறார் என விமானநிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் 2 நாள் புதுடெல்லி பயணத்தில் எவ்வித அரசியல் முக்கியத்துவமும் இல்லை. அவர் சொந்த பணி காரணமாக புதுடெல்லி சென்றுள்ளார் என கூறப்படுகிறது.

Related Stories: