×

இடைத்தேர்தலில், அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தால் மட்டும் அவர்கள் வென்றுவிடுவார்களா? : டிடிவி தினகரன்!!

சென்னை : சென்னையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை. என்னிடம் யாரும் பேசி அமமுக வேட்பாளரை வாபஸ் பெற வைக்கவில்லை. இடைத்தேர்தலில், அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தால் மட்டும் அவர்கள் வென்றுவிடுவார்களா?. அதிமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அக்கட்சித் தொண்டர்களுக்கே இல்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் குக்கர் சின்னத்தில் அமமுக போட்டியிடும்,என்றார்.


Tags : dtv , By-election, AIADMK, Double Leaf, Symbol, TTV Dhinakaran
× RELATED NDA கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தை சென்னையில் நடத்த திட்டம்