×

மொத்தம் 96 பேர் மனு தாக்கல்: இன்று பரிசீலனை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 31ம் தேதி தொடங்கியது. திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தேமுதிக வேட்பாளர் ஆனந்த், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சிவபிரசாந்த், அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணி செந்தில் முருகன், நாம் தமிழர் கட்சி மேனகா உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று முன்தினம் வரை 59 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் குவிந்தனர்.  

அடுத்தடுத்து வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததால் சிரமத்தை தவிர்க்க டோக்கன் சிஸ்டம் செயல்படுத்தப்பட்டது.  மாலை 3 மணி வரை யாரெல்லாம் அலுவலக வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டார்களோ அவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு இரவு 7 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன. நேற்று மட்டும் அதிமுக வேட்பாளர் தென்னரசு உள்பட 37 பேர் மனு தாக்கல் செய்தனர். இதில் 36 பேர் சுயேட்சைகள் அடங்குவர். கடந்த 31ம் தேதியில் இருந்து நேற்று வரை மொத்தம் 96 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை நடக்கிறது. நாளை மறுநாள் மனுக்களை வாபஸ் பெறலாம். அன்று மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

* 4 மிஷின்கள் பயன்படுத்த வாய்ப்பு
மொத்தம் 96 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். பரிசீலனையின்போது தள்ளுபடி மற்றும் வாபஸ் பெறுவது என கழிந்தாலும் குறைந்தபட்சம் 50 வேட்பாளர்களாவது களத்தில் நிற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு பேலட் மிஷினில் 16 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெறலாம். இதனால், குறைந்தபட்சம் 4 பேலட் மெஷின் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.


Tags : A total of 96 petitioners filed: consideration today
× RELATED சொல்லிட்டாங்க…