தென்காசி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்து கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் மதுரை ஐகோர்ட் கிளையில் ஆஜர்

தென்காசி: தென்காசியில் காதல் திருமணம் செய்து கடத்தப்பட்டதாக கூறப்படும் கீர்த்திகா ஐகோர்ட் மதுரை கிளையில் ஆஜராகி இருக்கின்றார். தென்காசி மாவட்டத்தை சேர்ந்த வினீத் என்பவர் அதே பகுதியை சேர்ந்த குஜராத்தி பெண்ணான கீர்த்திகா என்ற பெண்ணை காதல் செய்கிறார், இவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்ட நிலையில் இந்த பெண்ணை நீதிமன்ற உதவியுடன் கடந்த வருடம் திருமணம் செய்து அதனை பதிவு செய்து கொள்கின்றனர்.

இந்நிலையில் இந்த திருமணத்திற்கு பெண் விட்டார் தரப்பில் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர், இந்த எதிர்ப்பை தொடர்ந்து மாப்பிளை வீட்டிற்கு சென்ற அந்த பெண் வீட்டினர் அவர்கள் இருக்கக்கூடிய பகுதிக்கு சென்று பெரும் கலவரத்தை செய்து அவர்களது பெண்ணை கடத்தி சென்றதாக குற்றச்சாட்டு எழ்துள்ளது.

இது சம்மந்தமான சி.சி.டி.வி. காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனை தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் பல்வேறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன குறிப்பாக அங்கு சென்ற பெண் விட்டார் தரப்பின் மீது 7 நபர்களுக்கு மேல் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைபோல் தனது மனைவியை மீட்டு தர வேண்டும், ஏனென்றால் எங்களுக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று விட்டது. இது சம்மந்தமான பதிவு செய்து அவங்களையும் உயிர் நீதிமன்ற மதுரை கிளையில் அந்த காதல் கணவர் தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கில் தான் தனது மனைவியை மீட்டு தன்னிடம் ஒப்படடைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இது தொடர்ந்து ஏற்கனவே மதுரை உயர்நீதிமன்ற கிளை விசாரணைக்கு எடுத்து சம்மந்தப்பட்ட பெண்ணை நேரில் காவல்துறையினர் ஆஜர் படுத்தவேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் எங்கு இருக்கிறார்கள் என்று பெற்றோர் தரப்பில் விசாரணை நடத்தி வந்தனர். ஒரு தரப்பு காவல்துறையினர் அவர்கள் குஜராத்துக்கு சென்றதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இதனை தொடர்ந்து பெண் தரப்பில் தற்போது உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் இந்த வழக்கில் விசாரணைக்கு தாங்களே ஆஜர் படுத்துவதாக காவல்துறையினருக்கு நேற்று தெரிவித்திருந்தனர். அதன் பெயரில் தற்போது உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளதால் தற்போது பெண் வீட்டார் தரப்பு மற்றும் காதல் திருமணம் செய்த பெண் உள்பட பலரும் தற்போது உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஆஜராகியுள்ளனர். வழக்கு சற்று நேரத்தில் விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.         

Related Stories: