×

பயிற்சி ஆட்டத்தில் ஆஸி. வெற்றி

கேப் டவுன்: ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில், இந்திய அணியுடன் மோதிய ஆஸ்திரேலியா 44 ரன் வித்தியாசத்தில் வென்றது. நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. தொடக்க வீராங்கனை பெத் மூனி 28, ஆஷ்லி கார்ட்னர் 22 ரன் எடுக்க, கேப்டன் மெக் லான்னிங் டக் அவுட்டானார். அடுத்து வந்த வீராங்கனைகளும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேற, ஆஸி. அணி 15.4 ஓவரில் 79 ரன்னுக்கு 8 விக்கெட் இழந்து திணறியது.இந்த நிலையில், ஜார்ஜியா வேர்ஹம் - ஜெஸ் ஜோனஸன் ஜோடி 26 பந்தில் 50 ரன் விளாச, ஆஸ்திரேலியா  20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன் குவித்தது.

ஜார்ஜியா 32 ரன் (17 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), ஜோனஸன் 22 ரன்னுடன் (14 பந்து, 4 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் ஷிகா, பூஜா, ராதா தலா 2 விக்கெட், ராஜேஷ்வரி 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இந்தியா 16 ஓவரில் 85 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகி, 44 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஹர்லீன் 12, சர்வனி 11, தீப்தி ஷர்மா ஆட்டமிழக்காமல் 19 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் அணிவகுத்து ஏமாற்றமளித்தனர். ஆஸி. பந்துவீச்சில் பிரவுன் 4, கார்ட்னர் 2, கார்த், பெர்ரி, ஜோனஸன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா தனது 2வது பயிற்சி ஆட்டத்தில் நாளை வங்கதேசத்துடன் மோதுகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூர், விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. இப்போட்டிக்காக, இந்திய அணி வீரர்கள் நேற்று தீவிரமாகப் பயிற்சி செய்தனர். பயிற்சிக்கு இடையே ‘ரிலாக்ஸ்’ செய்யும் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, தொடக்க வீரர் ஷுப்மன் கில்.

Tags : Aussie , Aussie in practice match. success
× RELATED நமீபியாவுக்கு எதிராக ‘பவர் பிளே’ வெற்றி சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா