×

அய்யலூர் அருகே பீரங்கி மேடு மலையில் மகாராஷ்டிரா வனச்சரக அலுவலர்களுக்கு பயிற்சி

அய்யலூர் : அய்யலூர் அருகே பீரங்கி மேடு மலையில் மகாராஷ்டிராக வனச்சரக அலுவலர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபுரி வன உயிர் பயிற்சி கல்லூரியில் பயிற்சி மேற்கொண்டு வரும் 47 வனச்சரக அலுவலர்கள் மற்றும் நிறுவனத்தின் துணை இயக்குனர் ஆகியோர் தென்னிந்திய சுற்றுலா பயணத்தின் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்ட வன அலுவலகத்திற்கு வருகை தந்தனர். அவர்களை அய்யலூர் வனச்சரக அலுவலர் குமரேசன் வரவேற்றார்.

அவர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் பிரபு, காந்திகிராம பல்கலைக்கழக பேராசிரியர் ஆனந்தகுமார், இந்திய அறிவியல் நிறுவனத்தின் மூலம் ஒரு வருடமாக தேவாங்கு தொடர்பான ஆராய்ச்சி பணி மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர் ஆஷிஷா ஆகியோர் அவர்களுக்கு பயிற்சி அளித்தனர். அதன்பின்னர் பயிற்சி வனச்சரக அலுவலர்களை அய்யலூர் பீரங்கி மலையில் தேவாங்குகள் வாழும் பகுதிக்கு அழைத்துச் சென்று தேவாங்குகளின் குணாதிசயங்கள் உணவு முறை வாழ்வியல் இனப்பெருக்கம் ஆகியவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Tags : Maharashtra Forest ,Birangi Medu Hill ,Ayyalur , Ayyalur : Forest Officers were trained as Maharashtra on Cannon Hill near Ayyalur.Maharashtra State
× RELATED திறந்தவெளி கிணற்றில் ஆட்டோ பாய்ந்து டிரைவர், பயணி பலி: வடமதுரை அருகே சோகம்