×

சட்டீஸ்கர் காங்கிரஸ் மாநாடு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும்: கே.சி.வேணுகோபால் பேட்டி

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் வரும் 24ம் தேதி  முதல் நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநாடு இந்திய அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அக்கட்சியின்  பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறினார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு  சட்டீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் வரும் 24ம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், மூத்த தலைவர்கள் பவன் பன்சால், தாரிக் அன்வர் ஆகியோருடன் நேற்று ராய்ப்பூர் வந்தார்.

அவர்களை விமான நிலையத்தில் சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் வரவேற்றனர். பின்னர், கே.சி.வேணுகோபால் நிருபர்களிடம் கூறுகையில்,  ‘பாஜ பொய்களை மட்டுமே பரப்பி வருகிறது. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை குறித்து பொய்யுரைகளை பரப்பினர். ஆனால், அந்த யாத்திரை நாட்டின் மிகப்பெரிய அரசியல் இயக்கமாக மாறியது. ராய்ப்பூரில் நடைபெற உள்ள காங்கிரஸ் மாநாடு இந்திய அரசியலையே மாற்றியமைக்கப்போகிறது என்றார். பின்னர் அவர்கள் காங்கிரஸ் மாநாடு நடைபெறும் இடத்தை பார்வையிட்டனர்.

Tags : Chhattisgarh Congress Conference ,KC ,Venugopal , Chhattisgarh Congress Conference Will Bring Political Change: KC Venugopal Interview
× RELATED டெல்லியில் சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 8 பேரை கைது செய்தது போலீஸ்!