×

தமிழர்களுக்கு அதிகாரம் இலங்கை அதிபர் ரணிலுடன் அமைச்சர் முரளிதரன் ஆலோசனை

கொழும்பு: இலங்கை சென்றுள்ள ஒன்றிய வெளியுறவு துறை இணையமைச்சர் முரளிதரன் தமிழர்களுக்கு 13வது சட்ட திருத்தம் குறித்து அந்நாட்டின் அதிபர் ரணில் விக்கிரமசிங்க உடன் கலந்து ஆலோசித்தார். இலங்கையில் கடந்தாண்டு வரலாறு காணாத கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி இலங்கைக்கு கிடைக்க இந்தியா உத்தரவாதம் அளித்தது. இதற்காக கடந்த 2 வாரங்களுக்கு முன் இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அதிபர் ரணிலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் போது, இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் 13வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்த வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க அங்கு சென்ற இந்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளிதரன் அதிபர் ரணிலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இது குறித்து இலங்கை அதிபரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், `இலங்கையில் 13வது சட்ட திருத்தத்தை அமல்படுத்துவது பற்றி அதிபர் ரணில், இந்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் முரளிதரன் கலந்து ஆலோசித்தனர். 13-ஏ சட்டப் பிரிவை  வெற்றிகரமாக அமல்படுத்த முரளீதரன் வாழ்த்து தெரிவித்தார்,’ என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Minister ,Muralitharan ,President ,Ranil , Empowerment for Tamils Minister Muralitharan consults with Sri Lankan President Ranil
× RELATED புதுவை எம்பி தேர்தலில் படுதோல்வி;...