×

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 146 அடி உயருமுள்ள முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 146 அடி உயருமுள்ள ஏத்தாப்பூர் ஸ்ரீ முத்துமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலையில் இருந்து சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

 இதில் அதிகாலையில் இருந்து  பக்தர்கள் திரண்ட வண்ணம் உள்ளனர், இந்த கோவில் பகுதிகளான வாழப்பாடி பெத்தநாயக்கன்பாளையம் ஆத்தூர் அயோத்தியாபட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் 9 மணி வரை கடும் பனிப்பொழிவு இருந்து பணி மூட்டம் அதிகம் இருந்த  நிலையிலும் பணியையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.

 காலையிலிருந்து தற்போது வரை பக்தர்கள் சுமார் 50,000 மேற்பட்டோர் வந்து தரிசனம் செய்துள்ளனர் இங்கே கோவிலில் சிறப்பு தரிசனமும் லிப்ட் வசதியுடன் மேலே சென்று வேலுக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சியும் பிரசித்தி பெற்று  பக்தர்கள் மாலை அணிவித்து அதற்கு  அபிசேகம் வருகின்றனர்.

வாழப்பாடி டிஎஸ்பி ஹரி சங்கரி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் சேலம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஏத்தாப்பூர் பகுதியில் போக்குவரசு நெரிசல் காணப்படுகிறது  என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Murugan temple ,Vazhappadi ,Salem ,Thaipusa festival , Special worship at the 146 feet high Murugan temple near Vazhappadi in Salem district on the occasion of Thaipusa festival.
× RELATED ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50...