தாய்லாந்து ஓபன் டென்னிஸ் பைனலில் சுரென்கோ

யுஹுவா ஹின்: தாய்லாந்து ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, உக்ரைன் வீராங்கனை லெசியா சுரென்கோ தகுதி பெற்றார். அரையிறுதியில் கனடா நட்சத்திரம் பியான்கா ஆண்ட்ரீஸ்குவுடன் (22 வயது, 42வது ரேங்க்) நேற்று மோதிய லெசியா சுரென்கோ (33 வயது, 136வது ரேங்க்) 7-5 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றியதுடன், 2வது செட்டிலும் 4-0 என முன்னிலை வகித்த நிலையில் ஆண்ட்ரீஸ்கு காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார்.

இதைத் தொடர்ந்து, சுரென்கோ இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் சீன வீராங்கனை லின் ஸூ (29 வயது, 54வது ரேங்க்) 6-2, 6-4 என்ற நேர் செட்களில் சக வீராங்கனை வாங் ஸின்யுவை வீழ்த்தினார். இப்போட்டி 1 மணி, 37 நிமிடத்துக்கு நீடித்தது. சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான பைனலில் சுரென்கோ - லின் ஸூ மோதுகின்றனர்.

Related Stories: