×

தாய்லாந்து ஓபன் கால்இறுதியில் தோல்வி; நான் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை: பி.வி.சிந்து பேட்டி

பாங்காக்: தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக் நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் கால்இறுதியில், இந்தியாவின் பி.வி.சிந்து, தாய்லாந்தின் ரேட்சனோக் இன்டானனை எதிர்த்து நேற்று விளையாடினார். இதில், செட்டை 13-21 என எளிதாக விட்டுக்கொடுத்த சிந்து. 2வது செட்டிலும் மோசமாக ஆடி 9-21 என இழந்தார். இதனால் தொடரில் இருந்துவெளியேறினார். ஆடவர் ஒற்றையர்கால்இறுதியில் இந்தியாவின் சமீர்வர்மா, டென்மார்க் வீரரிடம் வீழ்ந்தார். கலப்பு இரட்டையரில் இந்தியாவின் சாய்ராஜ், அஸ்வினி பொன்னப்பா, மலேசிய ஜோடியை வீழ்த்தியது. தோல்வியால் ஏமாற்றம் அடைந்த பின் பி.வி.சிந்து கூறுகையில், இந்த போட்டியில் பல தவறுகளை செய்தேன் என நினைக்கிறேன். இன்று நான் எனது சிறந்த ஆட்டத்தை ஆடவில்லை. நான் இன்னும் நிறைய விஷயங்களை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். ரெட்சனோக் ஒரு சிறந்த வீரர், அதற்காக நான் தயாராக இருந்தேன், இன்று எனது நாளாக அமையவில்லை, என்றார்….

The post தாய்லாந்து ஓபன் கால்இறுதியில் தோல்வி; நான் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை: பி.வி.சிந்து பேட்டி appeared first on Dinakaran.

Tags : Thailand Open ,Sinthu ,Bangkok ,Thailand Open Badminton Tournament ,India ,Sind ,Dinakaran ,
× RELATED ஆங் சான் சூகி வீட்டு சிறைக்கு மாற்றம்