×

இஸ்லாம் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது பாபா ராம் தேவ் பேச்சால் சர்ச்சை

ஜெய்ப்பூர்: இஸ்லாமியர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதாகவும், இந்து பெண்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வதாகவும் யோகாகுரு பாபா ராம்தேவ் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூர் மாநிலம் பார்மரில் நடந்த மடாதிபதிகள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், “இந்து மதம் தன்னை பின்பற்றுபவர்களுக்கு நல்லதை மட்டுமே கற்று தருகிறது.

ஆனால், இஸ்லாம் மதம் தீவிரவாத செயல்களை ஊக்குவிக்கிறது. இஸ்லாமியரும், கிறிஸ்தவரும் இந்து பெண்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்கின்றனர்” என்று தெரிவித்தார். அவரது இந்த பேச்சு பரவலாக சர்ச்சையை எழுப்பியுள்ளது.

Tags : Baba Ramdev ,Islam , Controversy over Baba Ramdev's speech that Islam promotes extremism
× RELATED பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி