×

பொதுக்குழு தொடர்பான ஆவணங்களை ஏற்குமாறு தேர்தல் ஆணையத்திடம் சி.வி.சண்முகம் வலியுறுத்தல்

டெல்லி: பழனிசாமியின் இடையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் பிற்பகல் விசாரணைக்கு வர உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்க ஈபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளது. ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்க கோரி தேர்தல் ஆணையத்திடம் நேரில் கோரிக்கை வைக்க டெல்லியில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முகாமிட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு, செயற்குழு தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என உச்சநீதிமன்றத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்ததை தொடர்ந்து, இன்று பிற்பகல் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையிலும், சுமார் 1.30 மணியளவில் எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இந்திய தலைமை சேர்த்தால் ஆணையத்துக்கு செல்ல உள்ளார். ஏற்கனவே தேர்தல் ஆணையரை சந்திக்க நேரம் ஒதுக்க கேட்டுக்கொண்டதை தொடர்ந்து இன்று பிற்பகல் 1.30 மணிக்கு சி.வி.சண்முகம் தேர்தல் ஆணையம் சென்றார்.

கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி ஈபிஸ் தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான ஆவணங்கள் ஏற்கனவே தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனை இதுவரை தேர்தல் ஆணையம் மேற்றுக்கொள்ளவில்லை என நேற்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து பொதுக்குழு தொடர்பான ஆவணங்களை ஏற்குமாறு சி.வி.சண்முகம் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தினார்.


Tags : CV ,Shanmugam ,Election Commission ,General Committee , General Committee, Election Commission of India, CV Shanmugam Emphasis
× RELATED ஈரான் முதல் முறையாக ஸ்டார்லிங்க் இணையதளத்தை முடக்கியுள்ளது