புதுக்கோட்டை அருகே மீனவர் வலையில் சிக்கிய வாலடியான் விஷப்பாம்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி மீனவர் வலையில் அதிக விஷத்தன்மை கொண்ட 8 அடி நீளமுள்ள வாலடியான் பாம்பு சிக்கியது. புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி அருகே செம்பியன்மகாதேவிப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிவக்குமார், தினேஷ். இவர்கள் இருவரும் பைபர் படகில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். நேற்று காலை மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது வலையில் அதிக விஷத்தன்மை கொண்ட, 8 அடி நீளமுள்ள வாலடியான் என்ற பாம்பு சிக்கியது.

உடனே அந்தப் பாம்பு அதிக ஆக்ரோஷத்துடனும், கடும் சீற்றத்துடனும் அங்கும், இங்குமாக ஓடியது. உடனே சுதாரித்துக் கொண்ட மீனவர்கள் மடக்கிப் பிடித்ரனர். அதிக விஷத்த தன்மை வாய்ந்த பாம்புகளில் இதுவும் ஒன்றாகும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: