×

நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும்: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று திரிகோணமலை - மட்டக்களப்பு இடையே கரையை கடந்தது. இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.

தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக சில மாவட்டங்களில் இன்று(03-02-2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. திருவாரூர், காரைக்கால், நாகை(1-8ம் வகுப்பு வரை), ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Nagai ,Thiruvarur ,Weather Centre , Districts including Nagai, Thiruvarur likely to receive rain in next 3 hours: Meteorological Department
× RELATED நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கார் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு