×

சில பாஜக தலைவர்கள் நலனுக்காக எல்.ஐ.சி. மற்றும் வங்கிகளின் பணம் பயன்படுத்தப்படுகிறது: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தா: சில பாஜக தலைவர்கள் நலனுக்காக எல்.ஐ.சி. மற்றும் வங்கிகளின் பணம் பயன்படுத்தப்படுகிறது என மம்தா பானர்ஜி குற்றச்சாட்டாக கூறியுள்ளார். மேற்கு வங்காள புர்பா பர்தமான் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, எல்ஐசி தேசிய வங்கிகளில் போடப்பட்டுள்ள மக்களின் பணம் பாஜகவின் சில தலைவர்கள் பலனடைய பயன்படுத்தப்பட்டுள்ளது என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

ஒன்றிய அரசு பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர், பங்குச்சந்தை பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளார். ஒன்றிய அரசின் பட்ஜெட் பொய்கள் மட்டுமே நிறைந்தது என்று கூறிய அவர், 2024 பொது தேர்தலை கணக்கில் கொண்டே மத்திய அரசு பட்ஜெட் தயாரித்து உள்ளது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.


Tags : LIC ,BJP ,Mamata Banerjee , BJP, LIC, Bank, Money, Mamata, Allegation
× RELATED இந்தியா கூட்டணி நாளையே ஆட்சி அமைக்க...