×

‘படேல் சிலைக்கு சீமான் வாய் திறக்காதது ஏன்?’ பாஜவின் கொள்கைக்கு பாடம் புகட்டும் தேர்தல்: முத்தரசன்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில்  மாநில செயலாளர் முத்தரசரன் நேற்று அளித்த பேட்டி: பாஜ கட்சி ஆர்எஸ்எஸ் அமைப்பின் கரமாக செயல்பட்டு வருகிறது.  பாஜ ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட பிரதமர் அடிக்கல் நாட்டி பல ஆண்டுகள் ஆன பின்னரும் எந்த பணிகளும் நடைபெறவில்லை. ஆனால் பாஜ ஆட்சி புரியும் மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு  பயன்பாட்டில் உள்ளது. இப்படி தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களை புறக்கணிக்கும் போக்கையும், ஆளுநர்களை கொண்டு இடையூறு செய்யும் பணிகளையும் பாஜ செய்து வருகிறது.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் கண்ணுக்கு எட்டிய தூரம் எதிரிகள் யாரும் தெரியவில்லை. இந்த தேர்தலில் எங்கள் கூட்டணி பெறும் வெற்றி என்பது, பாஜவின் கொள்கைக்கும், அந்த கொள்கையை ஆதரிக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் தக்க பாடம் புகட்டுவதாக இருக்கும். கலைஞரை நினைவுப்படுத்தும் விதமாக மெரினா கடற்கரையில் பேனா வைக்கும் திட்டத்தை எதிர்க்கும் சீமான், பல்லாயிரம் கோடி மக்கள் பணத்தில் வல்லபாய் படேல் சிலை வைத்ததை பற்றி ஏன் வாய் திறக்க மறுக்கிறார்?. கடந்த 9 ஆண்டுகளில் 23 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்துள்ளார் பிரதமர் மோடி. எல்ஐசி நிறுவனத்தின் சொத்துக்களை அதானி நிறுவத்தில் முதலீடு செய்ததால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட போகிறது. பிரதமர் மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றாமல் தனது நண்பர்களான அதானி, அம்பானிகளுக்கான வளர்ச்சி திட்டங்களையே நிறைவேற்றி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Seaman ,Patel ,BJP ,Mutharasan , 'Why didn't Seaman open his mouth for Patel's statue?' Election will teach lesson to BJP's policy: Mutharasan
× RELATED NDA கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தை சென்னையில் நடத்த திட்டம்