×

அமைச்சரை சுட்டுக் கொன்ற வழக்கு: எஸ்ஐ டிஸ்மிஸ்; எஸ்பி டிரான்ஸ்பர்

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுகாதார துறை அமைச்சர்  நபா கிஷோர் தாஸ், நேற்று முன்தினம் ஜார்சுகுடா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, போலீஸ் எஸ்ஐ  கோபால் தாஸ் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். கைது செய்யப்பட்ட கோபால் தாஸ், மனநிலை பாதிக்கப்பட்டவராகவும், தொடர் சிகிச்சையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கை சிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே அமைச்சரின் பாதுகாப்பில் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி ஜார்சுகுடா மாவட்ட எஸ்பி ராகுல் ஜெயின் மற்றும் பிரஜ்ராஜ்நகர் துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி (எஸ்டிபிஓ) குபேத்ஸ்வர் போய் ஆகியோர் வெவ்வேறு நகரங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Tags : Minister ,SI , Minister's shooting case: SI dismissed; SP Transfer
× RELATED மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில்...