×

வலங்கைமான் பகுதியில் நெல்லுக்கு பிறகு பயறு சாகுபடி செய்ய வேளாண் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

வலங்கைமான் : வலங்கைமான் மற்றும் ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் வேளாண்மைத்துறையின் சார்பில் நெல் சாகுபடிக்கு பிறகு பயறு வகை பயிர் சாகுபடி செய்ய வலியுறுத்தி வேளாண் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன் ஆலோசனை யின் பேரில் வலங்கைமான் ஆலங்குடி மற்றும் அரிதுவாரமங்கலம் ஆகிய கிராமங்களில் நெல் சாகுபடிக்கு பிறகு பயறு வகை பயிர் சாகுபடி செய்ய வலியுறுத்தி வேளாண் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்வின்போது கலை குழுவினர் பயிர் வகை சாகுபடி பற்றிகரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தற்போது வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தப் பட்டுவரும் திட்டங்கள் பற்றியும், அட்மா திட்ட செயல்பாடுகள் பற்றியும் எடுத்துக் கூறினர். மேலும் இத்திட்டங்கள் பற்றிய விவரங்களை வட்டார வேளாண் அலுவலகத்திலும் உதவி வேளாண்மை அலுவலரிடமும் தெரிந்து கொள்ளலாம் எனக் கூறினார்.

இந்த கலை நிகழ்ச்சியின்போது வேளாண்மை அலுவலர் சூரியமூர்த்தி, உதவி வேளாண்மை அலுவலர்கள் ஏழுமலை, சிவலிங்கம், சரவணன், சப்தகிரிவாசன், சிரஞ்சீவி மற்றும் சிவானந்தம் உடன் இருந்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் விக்னேஷ் கலை குழுவினருக்கு நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சதீஷ்குமார் மற்றும் பிரியங்கா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Valankaiman , Valangaiman: In areas including Valangaiman and Alangudi, under the auspices of the Department of Agriculture, pulses are a type of crop after paddy cultivation.
× RELATED வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில்...