டெல்லி: ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை பெறுவோருக்கு வருமான வரி கிடையாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். புதிய வரி சலுகைகள் காரணமாக அரசுக்கு ரூ.38,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் நேரடி வரிகளில் அளித்த சலுகை மூலம் ரூ.37,000 கோடியும் மறைமுக வரி சலுகையால் ரூ.1,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
