×

ரயில்வே தலைமை அலுவலகம் சாம்பியன்

சென்னை: தெற்கு ரயில்வே கோட்டங்களுக்கு இடையிலான 9வது விளையாட்டுப் போட்டி  சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்தது. இதில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம், தலைமை அலுவலகம்-1, தலைமை அலுவலகம்-2 அணிகள் பங்கேற்றன. தெற்கு ரயில்வே அலுவலர்கள் சங்கமும்,  தெற்கு ரயில்வே பதவி உயர்வு அலுவலர்கள் சங்கமும் இணைந்து நடத்திய இந்த விளையாட்டுப்போட்டி 3 நாட்கள் நடந்தன. இதில் தலைமை அலுவலகம்-1 அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது. பட்டம் வென்ற அணிக்கு தெற்கு ரயில்வே தலைமை மேலாளர் ஆர்.என்.சிங் கேடயங்களையம், பரிசுகளையும் வழங்கி பாராட்டினார்.


Tags : Railway Head Office Champion