‘ஜெகன் அண்ணா’ உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 10,813 பயனாளிகளுக்கு ₹10.813 கோடி ஒதுக்கீடு-திருப்பதி கலெக்டர் தகவல்

திருப்பதி : திருப்பதி மாவட்டத்தில் ‘ஜெகன் அண்ணா’ உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ்   10,813 பயனாளிகளுக்கு ₹10.813 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் வெங்கடரமணா தெரிவித்துள்ளார்.ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டத்தில் உள்ள வினுகொண்டலோ பகுதியிலிருந்து ‘ஜெகன் அண்ணா’ உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 3வது தவணையாக பயனாளிகளின் கணக்கில் ₹330 கோடி செலுத்தும் நிகழ்ச்சியை முதல்வர் ஜெகன்மோகன் நேற்று தொடங்கி வைத்தார்.

இதில், திருப்பதி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் பயனாளிகளுடன் கலெக்டர் வெங்கடரமணா காணொலியில் பங்கேற்றார். பின்னர், பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கினார்.நிகழ்ச்சியில், கலெக்டர் வெங்கடரமணா பேசியதாவது: மக்கள் அதிக வட்டிக்கு மற்றவர்களை நாட வேண்டாம். பொருளாதார ரீதியில் உயர வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன்  தகுதியான பயனாளிகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஏற்கனவே 2 தவணை முறையில் ₹50 ஆயிரம் நிதியுதவி முதல்வர் ஜெகன்மோகன் வழங்கி வருகிறார்.

பிராமணர், தையல்காரர்கள் உள்ளிட்டோருக்கு ‘ஜெகன் அண்ணா ’ உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டது.

3ம் கட்டமாக பயனாளிகளின் கணக்கில் நிதியை டெபாசிட் செய்யும் திட்டத்தை முதல்வர் ஜெகன்மோகன் துவக்கி வைத்தார். திருப்பதி மாவட்டத்தில் உள்ள 10,813 பயனாளிகளுக்கு ₹10.813 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 6,122 தையல்காரர்களும், 3,567 ராஜகுளத்தினருக்கும், 1,124 பிராமணர்களும் வழங்கப்பட்டுள்ளது. 2020-21ம் ஆண்டில் 8,526 பயனாளிகளுக்கு ₹8.53 கோடி, 2021-22ம் ஆண்டில் 9,392 பயனாளிகளுக்கு ₹9.39 கோடி வழங்கப்பட்டுள்ளது.

நிதி உதவி பெறாதவர்கள் சம்பந்தப்பட்ட செயலகத்தில் விண்ணப்பித்தால் சரிபார்த்து மாதந்தோறும் நலத்திட்ட பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, அவர் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் அதிகாரமளித்தல்(பொறுப்பு) அலுவலர் பாஸ்கர், மாநகராட்சி ஊழியர்கள், பயனாளிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கலெக்டர் வெங்கடரமணா தொடங்கி வைத்தார்.

Related Stories: