×

அண்ணாமலை செல்ல இருந்த கோவை விமானம் திடீர் ரத்து

சென்னை: பாஜ மாநில தலைவர் அண்ணாலை, சென்னையில் இருந்து கோவை செல்ல இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று காலை பயணிகள் இல்லாமல் திடீரென ரத்து செய்யப்பட்டது. சென்னையில் இருந்து கோவைக்கு நேற்று காலை 10 மணிக்கு புறப்பட வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், தாமதமாக காலை 10.30 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த விமானம் திடீரென போதிய பயணிகள் இல்லை என ரத்து செய்யப்பட்டது. இதில், தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை கோவை செல்ல இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, நேற்று மாலை 4.30 மணிக்கு, சென்னையில் இருந்து ஐதராபாத் செல்லும் விமானமும், போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவையில் இருந்து நேற்று பகல் 12.45 மணிக்கு சென்னைக்கு வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மாலை 3.15 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து, சென்னை வர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டுள்ளன.  சென்னையில் நேற்று ஒரே நாளில் 4 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Coimbatore ,Annamalai , Coimbatore flight to Annamalai was suddenly cancelled
× RELATED ‘பாத்ரூமிற்கு போகும்போதும்,...