×

சுற்றுலா பொருட்காட்சி திடல் முதல் மயிலாப்பூர் வரை கூவம் ஆற்றை புனரமைப்பது தொடர்பாக ஆலோசனை: அமைச்சர்கள் பங்கேற்பு

சென்னை: சுற்றுலா பொருட்காட்சி திடல் முதல் மயிலாப்பூர் வரையிலான கூவம் ஆற்றை தூய்மைப்படுத்தி, அழகுபடுத்துவது தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. சென்னை தலைமை செயலகத்தில் நேற்று, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் அடையாறு கூவம் ஆற்றை இணைக்கும் பக்கிங்காம் கால்வாயில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புனரமைத்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சுற்றுலா பொருட்காட்சி திடல் பின்னாலிருந்து மயிலாப்பூர் வரை புனரமைப்பு செய்து, அகலப்படுத்தி கரையோரப் பகுதிகளில் உள்ள சுற்றுப் பகுதிகளை தூய்மைப்படுத்தி அழகுபடுத்துதல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.இதில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன், நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, சென்னை நதிகள் சீரமைப்பு கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ஸ்வர்ணா, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரிய மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ்குமார், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் கோவிந்த ராவ், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஜெயந்தி, சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் அமிர்தவல்லி மற்றும் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags : Tourism Expo ,Mylapore ,Coovam River , Tourism Expo Thital to Mylapore Consultation on Rehabilitation of Coovam River: Ministerial Participation
× RELATED ரூ.1.5 கோடி வழிப்பறி: 9 பேர் கைது