×

தஞ்சை மாவட்டத்தில் சம்பா பயிர்கள் அறுவடை தீவிரம்: கூடுதல் மகசூலுடன் அறுவடை நடைபெறுவதாக விவசாயிகள் தகவல்

தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் சம்பா பருவ நெல் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் ஞாயிற்று கிழமையும் கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடி காரணமாக வழக்கத்தை விட மேட்டூர் அணை மே மாதம் 24-ம் தேதியே திறக்கப்பட்டது. இதனால், குருவை சாகுபடி அமோகமாக நடைபெற்றது. தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் மூன்றே முக்கால் லட்சம் ஏக்கரில் சம்பா சாலடி சாகுபடி செய்யப்பட்டது. தங்குதடையின்றி காவிரி நீர் கிடைத்ததால் சம்பா பயிர்கள் நன்றாக விளைந்து கூடுதல் மகசூலுடன் விவசாயிகள் தற்போது அறுவடை செய்து வருகின்றனர்.

அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சார்பில் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 358 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பிப்ரவரி மாதத்தில் உச்சத்தை எட்டும் என்பதால் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது சன்ன ரகத்திற்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,160-ம், சாதாரண நெல் ரகத்திற்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,115-ம் விலை நிர்ணயம் செய்து விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.    Tags : Thanjana district , Tanjore, Samba, Harvest, Farmer, Info
× RELATED காசாங்காடு கிராமத்தில் தென்னையில்...