×

சமாஜ்வாடி கட்சியில் ஷிவ்பாலுக்கு புது பொறுப்பு

லக்னோ:  சமாஜ்வாடி கட்சி பொது செயலாளராக ஷிவ்பால் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். சமாஜ்வாடி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவுக்கும், அவரது சித்தப்பாவும்  முன்னாள் அமைச்சருமான ஷிவ்பால் யாதவ் இடையே கடந்த 2016ம் ஆண்டு மோதல் ஏற்பட்டது. அகிலேஷ் உடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்த ஷிவ்பால் தனிக்கட்சி தொடங்கினார்.

கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் மரணமடைந்ததால் கடந்த டிசம்பரில் நடந்த மெயின்புரி மக்களவை தொகுதிக்கு நடந்த இடைதேர்தலின் போது சமாஜ்வாடிக்கு ஆதரவாக ஷிவ்பால் பிரசாரம் செய்தார். இந்நிலையில் கட்சியின் புதிய நிர்வாகிகள் பெயர்களை கட்சி தலைவர் அகிலேஷ் வெளியிட்டார். அதில், ஷிவ்பாலுக்கு பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.


Tags : Shivpal ,Samajwadi Party , Samajwadi Party, Shivpalu, new charge
× RELATED தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை...