பாகிஸ்தானில் பஸ் தீப்பிடித்து 42 பயணிகள் பரிதாப பலி

இஸ்லாமாபாத்:  பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பயணிகள் பேருந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மாகாண தலைநகர் குவெட்டாவில் இருந்து சிந்துவின் கராச்சிக்கு 48 பேருடன் பேருந்து சென்று கொண்டிருந்தது.

அதிவேகமாக சென்ற பேருந்து லாஸ்பெலா என்ற இடத்தில் திரும்பும்போது பாலத்தின் தூண் மீது மோதி தீப்பிடித்து எரிந்தது. இதில் 42 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ஒரு குழந்தை, பெண் உட்பட 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.  அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: