1000 கி. ஆட்டுக்கறி, 3,000 கி. அரிசியில் 20 ஆயிரம் பேருக்கு கைமா பிரியாணி: திண்டுக்கல்லில் கமகமத்த கந்தூரி விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் நாகல் நகர் ஜும்ஆ பள்ளிவாசலில், நபிகள் நாயகம் பிறந்தநாளை முன்னிட்டு மத நல்லிணக்க கந்தூரி விழா ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும். அதன்படி நேற்று முன்தினம் இரவு பள்ளிவாசலில் கைமா பிரியாணி தயாரிக்கும் பணி விடிய, விடிய நடைபெற்றது. இதற்காக 3 ஆயிரம் கிலோ அரிசி, ஆயிரம் கிலோ ஆட்டுக்கறி, 600 கிலோ கத்திரிக்காய், 500 கிலோ நெய் உள்ளிட்ட பொருட்களை சேர்த்து கைமா பிரியாணி தயார் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தலைவர் அஹமது புகாரி தலைமையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நேற்று காலை சுடச் சுட கைமா பிரியாணி வழங்கப்பட்டது. நாகல் நகர், வேடபட்டி, ரவுண்டு ரோடு, பேகம்பூர், சாமியார்தோட்டம், சந்தைப்பேட்டை, திருமலைசாமிபுரம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அனைத்து மக்களும் சாதி, மத வேறுபாடின்றி நீண்ட வரிசையில் காத்திருந்து தாங்கள் கொண்டு வந்த பாத்திரத்தில் பிரியாணியை பெற்றுச் சென்றனர்.

Related Stories: