ஒன்னா நின்னாலும், தனியா நின்னாலும் வாய்ப்பே இல்லை: கனிமொழி எம்.பி

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே மேட்டமலையில், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி அளித்த பேட்டியில் ‘‘ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தலில் வெற்றி என்பது திமுக கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு தான் என்பது உறுதியானது. அதிமுக இரு அணிகளாக பிரிந்து வந்தாலும், ஒரே அணியாக சேர்ந்து போட்டியிட்டாலும் திமுகவின் வெற்றியை பறிக்க முடியாது. உறுதியாக காங்கிரஸ்தான் வெற்றி பெறும். திமுக தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்தவாறு மதுவிலக்கு அடிப்படையில் படிப்படியாக மதுபான கடைகளை அரசு குறைத்து வருகிறது’’ என்றார்.

Related Stories: