×

ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 7 பேர் பலி; 440 பேர் படுகாயம்

தெஹ்ரான்: ஈரானில் நேற்றிரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 7 பேர் பலியானதாகவும், 440க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி - ஈரான் எல்லைக்கு உட்பட்ட ஈரான் நாட்டின் வடமேற்கு நகரமான கோய் நகரில் நேற்றிரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. சில இடங்களில் வீடுகள் சரிந்து விழுந்தன. பீதியடைந்த மக்கள், வீட்டிலிருந்து வெளியே வந்து வீதியில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் 7 பேர் பலியாகினர். சுமார் 440 பேர்  காயமடைந்தனர்.

ஈரானில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், கோய் நகரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது. ஈரானிய செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏவின் கூற்றுப்படி, இந்த நிலநடுக்கம் ஈரானின் மேற்கு அஜர்பைஜான் மாகாணத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டது. அண்டை மாநிலமான கிழக்கு அஜர்பைஜானின் மாகாண தலைநகரான தப்ரிஸ் உட்பட பல நகரங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Tags : Iran , Powerful earthquake in Iran: 7 dead; 440 people were injured
× RELATED இத்தாலி கடலில் மேலும் 14 சடலங்கள் மீட்பு