×

உலக கோப்பை ஹாக்கி தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது இந்தியா

ரூர்கேலா: உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடரின் 9-12வது இடத்துக்காக தென் ஆப்ரிக்காவுடன் நேற்று மோதிய இந்தியா 5-2 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. ரூர்கேலாவில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், தொடக்கம் முதலே ஒருங்கிணைந்து விளையாடி தென் ஆப்ரிக்க கோல் பகுதியை முற்றுகையிட்ட இந்திய அணிக்கு, 4வது நிமிடத்திலேயே அபிஷேக் கோல் போட்டு முன்னிலை கொடுத்தார். தொடர்ந்து ஹர்மன்பிரீத் சிங் 11வது நிமிடத்திலும் (பி.சி), ஷம்ஷெர் சிங் 44வது நிமிடத்திலும் அபாரமாக கோல் அடிக்க, இந்தியா 3-0 என முன்னிலை பெற்றது. 48வது நிமிடத்தில் இந்திய வீரர் ஆகாஷ்தீப், தென் ஆப்ரிக்க தரப்பில் சம்கெலோ கோல் அடித்தனர். விறுவிறுப்பான கடைசி கட்டத்தில் இந்தியாவின் சுக்ஜீத் (58’), தென் ஆப்ரிக்காவின் முஸ்தபா (59’ பெனால்டி ஸ்ட்ரோக்) அடுத்தடுத்து கோல் அடித்தனர். ஆட்ட நேர முடிவில் இந்தியா 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி அர்ஜென்டினாவுடன் 9வது இடத்தை பகிர்ந்துகொண்டது.

Tags : India ,South Africa ,Hockey World Cup , India defeated South Africa in Hockey World Cup
× RELATED இந்தியா-தெ.ஆப்ரிக்கா பெண்கள் தொடர்: இன்று பெங்களூரில் முதல் ஒருநாள்