ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேமுதிக பொறுப்பாளர்கள் விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேமுதிக பொறுப்பாளர்களை நியமனம் செய்து விஜயகாந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுகிறது. தேமுதிக வேட்பாளராக ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் போட்டியிடுகிறார். அவர் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இந்நிலையில் இடைத்தேர்தல் தேமுதிக பொறுப்பாளர்களை கட்சியின் தலைவர் விஜயகாந்த் நேற்று அறிவித்தார். அதன்படி தேமுதிக துணை செயலாளர் ஏ.எஸ்.அக்பர், அவைத்தலைவர் இளங்கோவன், துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், துணை செயலாளர் ப.பார்த்தசாரதி ஆகியோர் தலைமையில் தனித்தனியாக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் என 168 பேர் இடம்பெற்றுள்ளனர்.

Related Stories: