×

கோயம்பேட்டில் வரத்து அதிரிப்பால் காய்கறி விலை திடீர் சரிவு

சென்னை: கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பால் காய்கறிகளின் விலை நேற்று திடீரென சரிந்தது. ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.50 லிருந்து ரூ.15க்கும், நவீன் தக்காளி ரூ.50லிருந்து ரூ.20க்கும், பெரிய வெங்காயம் ரூ.30லிருந்து ரூ.22க்கும், சின்ன வெங்காயம் ரூ.120 லிருந்து ரூ.60க்கும், வெண்டைக்காய் ரூ.120லிருந்து ரூ.60க்கும், கேரட், பீன்ஸ் மற்றும் அவரை ரூ.60லிருந்து ரூ.20க்கும், சவ்சவ் ரூ.20லிருந்து ரூ.13க்கும், உருளைக்கிழங்கு ரூ.40லிருந்து ரூ.25க்கும், பச்சை மிளகாய் ரூ.50லிருந்து ரூ.25க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுபோல் ஒரு கட்டு கொத்தமல்லி, புதினா ரூ.10லிருந்து ரூ.1 க்கும், எலுமிச்சை பழம் ரூ.7லிருந்து  ரூ.1க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகள் தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறுகையில், ‘‘கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேற்று காலை 650 வாகனங்களில் 7000 டன் காய்கறிகள் வந்து குவிந்ததால் விலை குறைந்துள்ளது. காய்கறிகளின் விலை குறைந்தாலும் போதுமான சிறு வியாபாரிகள் வராததால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர். ஆனால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சியுடன் காய்கறி வாங்கி சென்றனர். இந்த விலை சரிவு ஒருவாரத்துக்கு நீடிக்கும்” என்றார்.

Tags : Coimbatore , Vegetable prices fall sharply in Coimbatore due to supply shock
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...