ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அமமுக வேட்பாளர் சிவபிரசாத்: டி.டி.வி. தினகரன் அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் சிவபிரசாத் போட்டியிடுவார் என்று டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ம் தேதி நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஏ.எம்.சிவபிரசாத் வேட்பாளராக போட்டியிடுவார் என்று கட்சியின் பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சிவபிரஷாந்த்(வயது 29) பிஇ, எல்எல்பி படித்துள்ளார். ஈரோடு குமலன்குட்டை பகுதியை சேர்ந்தவர். தந்தை பெயர் முத்துக்குமரன். தாயார் சிவசக்தி. இவரது மனைவி டாக்டர் கீர்த்தனா.

அமமுகவில் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர். ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தலைவராக 2017ம் ஆண்டு முதல் பணியாற்றியுள்ளார். 2018ம் ஆண்டு இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை என அணி இரண்டாக பிரித்போது மாவட்ட இளைஞர் பாசறை தலைவராக பொறுப்பேற்றார். பின்னர் 2020ம் ஆண்டு மாநில தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு துணை செயலாளராக பணியாற்றி வந்தார். 2022ம் ஆண்டு முதல் ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: