இந்திய கிரிக்கெட் வீரர் அக்‌ஷர் பட்டேலின் திருமணம்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

குஜராத்: இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல் ரவுண்டராக விளங்கி வருபவர் அக்‌ஷர் பட்டேல், சமீபத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தினால் தொடர் நாயன் விருதை பெற்று சென்றார்.

இந்த நிலையில், அக்‌ஷர் பட்டேல் தனது நீண்ட நாள் தோழியான மேகாவை நேற்றிரவு திருமணம் செய்து கொண்டார். அக்‌ஷர் பட்டேலும் மேகாவும், நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். இதையடுத்து கடந்த ஆண்டு அக்ஷர் படேலின் 29-வது பிறந்தநாளன்று இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில், நேற்று இரவு குஜராத் மாநிலம் வதோதராவில் வைத்து அக்ஷர் படேல் மற்றும் மேகாவிற்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள், குடும்ப நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அக்‌ஷர் பட்டேல் திருமண கோலத்தில் உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories: