×

உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு மிக முக்கியம்: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் கருத்து

மாஸ்கோ: உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு மிக முக்கியம் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்தார். ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு மிக முக்கியம். பொருளாதார வளர்ச்சியில் முக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

ஆசிய நாடுகளில் இந்தியாவின் செல்வாக்கு அதிகமாக உள்ளது. சீனா, இந்தியாவை பற்றி குறிப்பிட வேண்டுமானால், இரு நாடுகளும் அந்தந்த பிராந்தியங்களுக்கான அதிகார மையங்களாக செயல்படுகின்றன. அதனால் உலக அளவில் அவர்களின் திறனை புறக்கணிக்க முடியாது. ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் கோரிக்கைக்கு ரஷ்யா ஆதரவாக இருக்கிறது. இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கான ஆதரவை ரஷ்யா அளிக்கும்.

ஐக்கிய நாடுகள் சபையில் மட்டுமல்ல, பிராந்திய அமைப்புகளிலும் இந்தியாவின் பங்கு மிகவும் அதிகரித்துள்ளது. உக்ரைன் உடனான பேச்சுவார்த்தைக்கு மேற்கத்திய நாடுகளும், அமெரிக்காவும் முட்டுக்கட்டை போடுகின்றன’ என்று அவர் கூறினார்.

Tags : India ,Russian ,Foreign Minister , India's role in global economy is very important: Russian Foreign Minister comments
× RELATED கப்பலில் கடத்தப்பட்ட ரூ.1 லட்சம் கோடி...