போட்டியிடுவது நானல்ல முதல்வர் மு.க.ஸ்டாலின்தான்: ஈவிகேஎஸ். இளங்கோவன் அதிரடி

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் பேசுகையில், ‘நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளேன். ஆனால், உண்மையிலேயே தொகுதியில் போட்டியிடுவது முதல்வர் மு.க.ஸ்டாலின்தான். மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்ட அனைவரும் இணைந்து இத்தேர்தலில் நிற்கிறோம். எனது மகன் திருமகன் ஈவெரா விட்டுச்சென்ற பணிகளை தொடர்ந்து செயல்படுத்திட வாக்காளர்கள் எனக்கு வாய்ப்பு கொடுங்கள்.

திருமகன் ஈவெரா கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தொகுதி மக்களிடம் நல்ல பெயரை பெற்றுள்ளார். 800 இடங்களில் புதிதாக தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.  இது போன்ற பல திட்டங்களை அமைச்சர்களை நேரில் சந்தித்து தொகுதிக்காக செயல்படுத்தி உள்ளார். தமிழ்நாட்டின் மொழி, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை காக்கும் காவல் வீரனாக இருந்து செயல்பட்டு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கரத்தை பலப்படுத்தும் வகையில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்’ என்று தெரிவித்தார்.

Related Stories: