×

இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவளிக்க வேண்டாம் எனவும் உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு : சமத்துவ மக்கள் கட்சி அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடவில்லை என்று கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவளிக்க வேண்டாம் எனவும் உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் கூறியுள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து நேற்று காலை சென்னை தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனைக்கூட்டம் நடந்தது

மேலும், நேற்று மாலை உயர்மட்டக்குழு நிர்வாகிகளுடன் ஆலோசித்து, முழுமையாக ஆய்வு செய்ததன் அடிப்படையில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. எந்த கட்சியினருக்கும், யாருக்கும் ஆதரவு அளிக்க வேண்டாம் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளது.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் முன்னோடிகளும், சகோதர. சகோதரிகளும் தொடர்ந்து மக்கள் நலனுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டு, மக்கள் நலனுக்காக தொடர்ந்து செயல்பட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று சரத்குமார் கூறியுள்ளார்.



Tags : Samatwa People's Party , By-elections, do not support any party, Equality People's Party, notification
× RELATED ச.ம.க. மாவட்டச் செயலாளர் த.வா.க.வில் இணைந்தார்..!!