×

மனித உரிமை மீறல்; தலிபான் அரசுடன் பேச்சுவார்த்தை: வெள்ளை மாளிகை தகவல்

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து தலிபான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ஊடக தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியதாவது: மனிதாபிமான உதவி வழங்குவதில் உலக நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு ஆகஸ்ட், 2021ம் ஆண்டு முதல் இதுவரை ரூ.8,985 கோடி நிதி உதவி அளித்துள்ளது. ஆனால் சமீப காலமாக, ஆப்கானிஸ்தான் பதிலுக்கு கொடூரமான உத்தரவுகள், வெறுக்கத்தக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

எனவே, அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து அந்நாட்டின் தலிபான் அரசுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. எந்த மாதிரியான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ளும் என்பது பற்றி தற்போது கூற முடியாது. அதே நேரம், அமெரிக்கா அதன் நட்பு மற்றும் கூட்டணி நாடுகளுடன் அடுத்த கட்ட நவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. ஆப்கானிஸ்தான் தனது மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்கான தண்டனையை அனுபவித்தே ஆகும். இவ்வாறு அவர் பேசினார்.


Tags : Taliban Government ,White House , Human rights violation; Talks with Taliban government: White House briefing
× RELATED இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு...