நெல்லை எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் வீட்டிற்கு நேற்று வந்த பாஜ தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறுகையில், ‘ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியிலுள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து வலுவான ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதுதான் பாரதிய ஜனதாவின் எண்ணம். அதிமுகவினர் அனைவரும் ஒன்றுமையுடன் இந்த தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார்.
